Tuesday, 7 August 2012

Vikatan Interview


ஜெயா.டி.வியில் இருமலர்கள், சன்.டி.வியில் செல்லமே, இளவரசி என்று சீரியல் ராணியாக வலம் வரும் மகாலட்சுமி இப்போது விஜய் டி.வி 'அவள்' சீரியலில் வில்லி ரேஞ்சுக்கு நடிப்புத் திறமை காட்டி வருகிறார். 

"ஒரே மாதிரி காம்பியர் பண்றது, நடிக்குறதுன்னு அலுத்துப்போயி நெகடிவ் ரோல் பண்ண ஆரம்பிச்சேன். நிறைய பேரு திட்டி, சாபம் விட்டாலும் அதை என் கேரக்டருக்கான் கிரெடிட்டா எடுத்துக்குறேன். சிலர் ஓவரா கோவத்தைக் காட்டும்போது அதை மகாலட்சுமி கிட்ட காட்டாதீங்க, கேரக்டர்கிட்ட காட்டுங்கன்னு சொல்லிடுவேன். நான் சஞ்சீவ் ஜோடியா நடிக்குறேன். சஞ்சீவை ஷூட்டிங்லதான் நேர்ல பார்த்தேன். ரொம்ப ஃபிரண்ட்லி.. ஒரு நிமிஷம் கூட சும்மா இல்லாம கலாய்ப்பாரு. செட்டே கலகலன்னு  இருக்கும். 

கணவர் அனில்குமார் எப்போ பார்த்தாலும் கிரிக்கெட்டே கதின்னு கிடப்பாரு. சீரியல்,படம் பார்க்கவே முடியலன்னு 52 இன்ச் எல்.சி.டி டி.வி வாங்கிட்டேன். இனிமே நான் நடிச்ச அத்தனை சீரியல்களையும் ஒரு எபிசோடு கூட விடாம பார்த்துடுவேன். சின்னதா ஒரு ரெஸ்ட் தேவைப்படுறதால அலப்பி போட் ஹவுசுக்கு கிளம்பிட்டு இருக்கோம். பை" என்று ஆசையாக பறக்கிறார் மகாலட்சுமி.